கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
123

கிரீஸின் ஈவியா தீவில் நேற்று (03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீவின் மான்டூடி நகருக்கு அருகேயும், தலைநகர் ஏதென்ஸுக்கு 90 கிலோமீற்றருக்கு தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிச்டர் 5.1 அலகுகளாக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.