கிளிநொச்சி, கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் 102 வது சர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வு இன்று நடைபெற்றது.பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு, பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் கூட்டுறவாளர்கள் மற்றும் கூட்டுறவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.