வெல்வோம் சிறீலங்கா நடமாடும் சேவை இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான நடமாடும் சேவை பிற்பகல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.இன்றைய முதல் நாள் நடமாடும் சேவையினை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் ,கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்-முரளீதரன் மற்றும் வேலைநாட்டில் வேலைவாய்ப்பை பெறும் குடும்பத்தினர், அவர்களின் பிள்ளைகள் ,பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
வெல்வோம் சிறீலங்கா நடமாடும் சேவை நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

