கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலைமாற்றத்திற்கான நீதி செயலமர்வு!

0
57

தேசிய சமாதான பேரவையின், ‘நிலைமாற்றத்திற்கான நீதி’ செயலமர்வு, இன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.நீதி மற்றும் பொறுப்பு கூறுவதற்கான மக்கள் ஒன்றிணைவு செயற்றிட்டத்தின் கீழ், மாவட்ட அரச அதிகாரிகளுக்கான செயலமர்வு, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது, தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெகான் பெரேரா, இணையவழி ஊடாக பங்கேற்று, தெளிவூட்டல்களை வழங்கினார்.
வளவாளராக, நீதி மற்றும் பொறுப்பு கூறுவதற்கான மக்கள் ஒன்றிணைவு செயற்றிட்டத்தின் முகாமையாளர் என்.விஜயகாந்தா பங்கேற்றார்.