யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் இங்கிலாந்தின் பேமிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றினால், இன்று, கிளிநொச்சியில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில், மருத்துவ முகாம் ஆரம்பமானது. இருதய நோய் தொடர்பில், வடக்கு மாகாணத்தில், பத்தாயிரம் மக்களை சந்தித்து, அவர்களின் உடல் நலன் தொடர்பாக ஆராய்ந்த பொழுது, மருத்துவ சிகிச்சை பெறுவதில் எற்படும் பல சிக்கல் தொடர்பாக அறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அவ்வாறான இடங்களில் மருத்துவ முகாம்களை மேற்கொள்ளும் நோக்கில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடமும், இங்கிலாந்து மருத்துவ பீடமும் இணைந்து, இந்த மருத்துவ முகாமை நடத்தியிருந்தன. சத்திரசிகிச்சை நிபுனர், பொது வைத்திய நிபுனர், சிறுநீரக வைத்திய நிபுனர் வைத்தியர் பாலகோபி, பெண்ணியல் வைத்திய நிபுனர் ரகுராமன் என பல வைத்தியர்கள், மருத்துவ சேவையை வழங்கினர். இந்த வைத்திய சேவை ஊடாக, தூர இடங்களில் இருந்தும் சென்ற பலர், வைத்திய சேவையை பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று பெற வேண்டிய வைத்திய சேவையை, இந்த மருத்துவ முகாம் ஊடாக பெற்றதாக, சிலர் குறிப்பிட்டனர். இவ்வாறான நிலையில், மருத்துவ சேவையை, பின்தங்கிய கிராமங்களுக்கும் கிடைக்க கூடியதாக மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.