கிளிநொச்சி, புண்ணை நீராவி பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது,
இரத்ததான முகாமை சிவில் பாதுகாப்பு திணைக்களம், ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு, புண்ணை நீராவி பகுதியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் சந்தன சோமபால தலைமையில் குறித்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
இந்த முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.