கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில், இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம், இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து, திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர், கிராம சேவையாளர், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குறித்த திட்டத்தின் மூலம், 10 மில்லியன் ரூபா பெறுமதியில், அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.