கிளிநொச்சியில் கனரக வாகனம் தடம்புரள்வு!

0
218

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில், யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில், மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று காலை 6.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.