கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இன்று காலை குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்பகுதியில் ஏ9 வீதியில் வங்கி நடவடிக்கைகளுக்காகச் சென்றவர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காற்று காரணமாக குளவிக்கூடு கலைந்ததில் பறந்து வந்த குளவிகளால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீதியால் பயணித்தவர்கள் அச்சமடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.