கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் பூநகரி வேரவில் பகுதியில் 204 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மக்களின் நிலைப்பாட்டை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அத்துடன் பளையில் தனியார் நிறுவனம் காற்றாலை அமைப்பது தொடர்பாகவும் மற்றும் கோவில்வயல் பகுதியில் தனியார் நிறுவனம் உன்று காற்றாலை அமைப்பது தொடர்பாகவும் , கோவில் வயல் பகுதியில் தனியார் நிறுவனம் சூரிய மின்கல தொகுதி அமைப்பது தொடர்பாகவும் இன்றைய கூடட்த்தில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் ,பொலிஸார், கடற்படையினர், இராணுவ உயரதிகாரிகள் ,மாவட்ட திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.