கிளிநொச்சியில் பாரிய விபத்து: சிரேஸ்ட சட்டத்தரணி பயணித்த கார் விபத்துக்குள்ளானது!

0
245

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் இன்று காலை டிப்பர் வாகனமும், காரும் விபத்துக்குள்ளனது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்துள்ளது.
எனினும் காரில் பயணித்த சிரேஸ்ட சட்டத்தரணி தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பித்தார்.
இதன் போது ஏ-9 வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை, கூடியிருந்த இளைஞர்களின் உதவியுடன் பொலிசார் சீர்செய்தனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.