கிளிநொச்சியில் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு கொரோனா!

0
190

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
வட்டக்கச்சி சென்று திரும்புகையில் பேருந்து ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில் உள்ள பாலத்தில் விழுந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியை சேர்ந்த தியாகராச சிவநாதன் என்ற 54 வயதுடையவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இதேவேளை இவருடன் பயணித்த மற்றொருவரை காணவில்லை என சாரதியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.