கிழக்கு மாகாணத்தில், எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்னசேகர தலைமையில்
நேற்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கத்தின் ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கேட்போர் கூடத்தில், கூட்டம் நடைபெற்றது.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில், எயிட்ஸ் நோயின் பரவுகை தொடர்பிலும் ஆராயப்பட்டது.
பிரதம செயலாளர் பீ.எஸ்.ரத்னாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாண பணிப்பாளர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டீனா முரளீதரன், மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் உள்ளிட்ட சுகாதார துறை சார் அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் என பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.