கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக, திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜெயவிக்ரம
நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவால், இந்நியமனம் நேற்றைய தினம் வழங்கப்பட்டது. மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு 4 புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களும், ஆளுநரால் கையளிக்கப்பட்டன.