கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட செயலமர்வு

0
3

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில், ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில், கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட ஆளுநர், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெறும் குப்பைகளை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு நீண்டகால திட்டமாகும் எனக் குறிப்பிட்டார்.