கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் கௌரவிப்பு

0
223

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக்கின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்றது
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எஸ் கே தனுஷ் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ ஆர் எம் தௌபீக் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன் போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த காலங்களில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக்கின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம் ரிபாஸ், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஏ வாஜித், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம் மாஹிர், ஆகியோர்களுடன் வைத்திய அதிகாரிகள் தாதியே உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் என பெருந்தகையானோர் கலந்து கொண்டிருந்தனர்.