ஐ.பி.எல். 20 க்கு 20 தொடரின் 21ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 8 இலக்குகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 இலக்குகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் அபினவ் மனோஹர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் மற்றும் டி நடராஜன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் மார்கோ ஜென்சன் மற்றும் உம்ரன் கான் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 19.1 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 2 இலக்குகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதனால், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 8 இலக்குகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 57 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்கினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கேன் வில்லியம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.