குடிபோதையில் அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் கைது

0
122
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.களுத்துறை – மத்துகம வீதியில் இருந்து தொடங்கொட மாற்றுப்பாதையில் சட்டவிரோதமாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்த சந்தேக நபர், மாத்தறை நோக்கி பயணித்ததாக பொலிஸார் தெரிவிகின்றனர்கைது செய்யப்படும் போது மதுபோதையில் இருந்த சந்தேக நபரை பொலிஸ் அதிகாரிகள் குழு துரத்திச் சென்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடங்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்