சீனா, ஜிங்சு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பிரசவ கால விடுமுறையைத் தவிர்ப்பதற்காக வேலையாட்களை தேர்வு செய்யும் போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் வேலையாட்களை தேர்வு செய்யும் நேர்முகத்தேர்வில் பெண்களுக்கு முழு உடற் பரிசோதனையும் கர்ப்ப பரிசோதனையும் செய்யப்படுகிறது.
பரிசோதனை முடிவில் பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு வேலை கிடையாதாம். மேலும், குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பற்றியும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஏற்கனவே குழந்தைகள் பிறந்து இருந்தால் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.