குரங்கம்மை குழந்தைகளை தாக்கும் அபாயம்!

0
141

ஆபிரிக்காவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதையும் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வரும் குரங்கம்மை நோய் தற்போது திரிவடைந்து வருகின்றது.
ஆண்களை மாத்திரம் அதுவும் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பில் உள்ய ஆண்களை மாத்திரம் தாக்கும் என கூறப்பட்ட குரங்கம்மை தற்போது 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் தாக்கியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் 7 குழந்தைகள் குரங்கம்மை காய்சலினால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குரங்கம்மை காய்ச்சலின் தன்மை சாதாரண காச்சலை விட வீரியம் கூடியதாக காணப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார மையம், புதிய திரிபு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை இந்த குரங்கம்மை ஏற்படுத்துமா? என்பதில் சாதமான போக்குகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.