30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

குருந்தூர்மலைக்கு இரவு வேளையில் திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விஜயம் செய்துள்ளனர்.

கட்டுமானப் பணியினை இராணுவத்தினர் முன்னெடுப்பதாகவும் இரவு வேளைகளில் குறித்த கட்டுமான பணிகள் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் நேற்று இரவு குறித்த பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது, குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும், முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன் காணப்பட்டுள்ளதுடன் இராணுவ சீருடையில் பலர் காணப்பட்டனர்.

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் கட்டுமான பொருட்களும் காணப்பட்டதோடு சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் கட்டில்கள் போடப்பட்டு மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றபோது அங்கு இருந்தவர்கள் காட்டுக்குள் ஓடியுள்ளனர்.

குருந்தூர் குளத்திற்குள் இராணுவத்தை தவிர வேறு யாரும் மீன்பிடிக்கவோ குளத்திற்குள் பிரவேசிக்கவோ முடியாத நிலையில், பெருவாரியான மீன்களைப்பிடித்து கருவாடாக்கி கொண்டு செல்கின்ற செயற்பாடுகளும் இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றமை இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தீயில் சுடப்பட்டுக் கொண்டிருக்கின்ற குளத்து மீன்களும் ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் அங்கு காணப்பட்டுள்ளது.

இவ்வாறான திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் தொடர்பில் மார்ச் மாதம் இடம்பெறும் ஐ.நா அமர்வுகளில் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles