குரோஷியா விமான விபத்தில் 4 பேர் பலி

0
130

குரோஷியா நாட்டில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 போ் உயிரிழந்தனா்.
குரோஷியாவின் ஸ்பிலிட் துறைமுகத்திலிருந்து ஜொ்மனி நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட சிறிய ரக விமானம் திடீரென மாயமானது.
ரேடாரின் தகவல் தொடா்பிலிருந்து காணாமல்போன அந்த விமானத்தில் 4 போ் இருந்தனா். இந்நிலையில், மத்திய குரோஷியாவின் புரோகனாக் என்ற பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கிக் கிடப்பது ட்ரோன் மூலம் கண்டறியப்பட்டது.
மீட்புக் குழுவினா் அந்தப் பகுதிக்கு நேற்று முன்தினம் (30) சென்று பாா்வையிட்ட போது, விமானத்தில் இருந்த 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்ததாக சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவா் டாமிா் டிரட் தெரிவித்தாா். அவா்கள் எந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்பதை அவா் தெரிவிக்கவில்லை.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.