மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்கள், பாலங்களை புனரமைத்தல், குளங்களை புனரமைத்தல் போன்ற திட்டங்கள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
சப்பிரிகம திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 69 கோடி ரூபா நிதி இப்போது பூர்த்தியடையும் நிலையில் உள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் 4 ஆம் குறிச்சி காளிகோயில் தோட்ட வீதி கொங்கிறீட் வீதியாக அமைக்கப்படவுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் 4 ஆம் குறிச்சி காளிகோயில் தோட்ட வீதி ஒருகோடி பத்து இலட்சம் ரூபா நிதியில் கொங்கிறீட் வீதியாக அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று ஆரம்பம் செய்தார்.
தங்கவேல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த வீதி மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமான பாதையாக இருந்ததனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர்.
இதையடுத்து அப்பிரதேச பொதுநல அமைப்புக்களினால் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து இவ்வீதியை கொங்கறீட் இட்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.