Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் குழந்தையின் கைகால்களை திருகியதாக மர்மமாக உயிரிழந்த குழந்தையின் தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தையொன்று நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளது.உயிரிழந்த குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட வேளை, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்திருந்தமை , தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமையுடன் உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டிருந்தது.
குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் குழந்தையின் தாயார், மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸ் விசாரணையில்,குழந்தை பால் குடிக்க மறுப்பதால் கைகள் கால்களை திருகினேன்.
ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.பொலிஸார் தாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னரே , நீதிமன்ற உத்தரவின் பேரிலையே குழந்தையின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.