குவாத்தமாலாவில் பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 36 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக நகர தீயணைப்புத் துறையினர் குறிப்பிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டு ஜனாதிபதி பெர்னாண்டே அரேவலோ 3 நாட்கள் துக்கதினத்தை அறிவித்துள்ளார். மேலும் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகளில் உதவ நாட்டின் இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ஆகியவற்றை நியமித்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது