குவிந்துக் கிடக்கும் தபால்கள்: மருந்து விநியோகத்தில் பாதிப்பு

0
174

தபால் துறை ஊழியர்களின் அதிகாரப்பூர்வமற்ற வேலைநிறுத்தம் காரணமாக, தபால் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் தபால்கள் குவிந்துக் கிடப்பதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
வேலைநிறுத்தம் காரணமாக, தபால் மூலம் மருந்துகளை விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நேற்று (1) ஆரம்பமாகியிருந்தாலும் தபால் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
மேலும் 7 ஆம் திகதி பயணக்காட்டுப்பாடு நீக்கப்படும்வரை பணியாற்ற முடியாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன என்று, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் தபால் தொழிற்சங்கங்களுடன் நேற்று (1) பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தியப் போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் தபால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முடிந்தவரை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.