குவைத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடமொன்றிலேயே பெரும் அழிவை ஏற்படுத்திய தீ மூண்டுள்ளது என குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மங்காவ் நகரில் உள்ள ஆறுமாடிக்கட்டிடத்தின் சமையலறையில் தீ மூண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.பெருமளவு வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்திலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது,பலர் மீட்கப்பட்டுள்ளனர் துரதிஸ்டவசமாக பலர் உயிரிழந்துள்ளனர்,பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்