கூகுள் இணைத்தளம் நேற்றிரவு ஒரு அரிய செயலிழப்பை சந்தித்தாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் தேடுதலின் போது, தேடுதலுக்கான முடிவுகள் தவறானவை என முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், பிற வலைத்தளங்களான ஜூ-மெயில், மற்றும் யூ-ரியுப் போன்ற பிற பயன்பாடுகள் பாதிக்கப்படவில்லை. இரவு 9:09 மணியளவில் ஆரம்பமான இந்த செயலிழப்பு, இரவு 9:40 மணியளவில் முற்றாக இணையத்தளம் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரவு 10:30 மணியளவில் பெரும்பாலும் சிக்கல் தீர்க்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.