ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்தித்துப் பேச்சு நடத்துவர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் அரசுக் கட்சி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமே பங்கேற்பர். மற்றொரு பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியில் இந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார்கள் என்று முன்னரே அறிவித்திருந்தது.
ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த சந்திப்பு கடந்த 15ஆம் திகதி இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சி நடத்திய போராட்டம் காரணமாக இன்றைய தினத்துக்கு சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 15ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்று ஜனாதிபதியுடன் பேச வேண்டிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர். இதன்போது, தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு, புதிய அரசியல் சாசனம், அரசியல் கைதிகளின் விடுதலை என தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும் நாட்டில் இன்று நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாகவும் பேசுவது எனத் தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.