கூரையில் பொருத்தப்படும் புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தை திருத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள செய்தியில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கூரையில் பொருத்தப்படும் புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டண திருத்தத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள இரு அடுக்கு கட்டண முறையான 22 ரூபாய் மற்றும் 15.50 ரூபாய்க்கு பதிலாக, 500 கிலோ வோல்ற்க்கு குறைவான புதிய அமைப்புக்கு 37 ரூபாய் மற்றும் 500 கிலோ வோற்றிக்கு மேல் உள்ள புதிய அமைப்புகளுக்கு 34.50 ரூபாய் புதிய நிலையான கட்டணம் இருபது வருடங்களுக்கு செயற்படுத்தப்படுகிறது.