கெக்கிராவ பிரதேசத்தில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

0
113

அனுராதபுரம் கெக்கிரவ பிரதேசத்தில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் நோக்கில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இபலோகம பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 550 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.