கெஸ்பேவ-பொல்கஸ்ஓவிட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலைiயில்இ அவர் 5.06 அடி உயரம் கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.