கெஹலிய ரம்புக்வெலவை நாளை கண்டி மேல் நீதிமன்றில் முற்படுத்த உத்தரவு

0
77

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை நாளை கண்டி மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, நாவலப்பிட்டி – கறுவாத்தோட்டம் பகுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்தமை மற்றும் ஐந்து பேரை படுகாயமடைய செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான இந்த வழக்கு நாளை கண்டி மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதற்காகவே, கெஹலியவை நீதிமன்றில் முற்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.