கேங்ஸ்டர் கதைக்களத்தில் கார்த்தி.. இயக்குனர் யார் தெரியுமா

0
84

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

தற்போது நடிகர் கார்த்தியின் கைவசம் வா வாத்தியாரே, மெய்யழகன் படங்கள் உள்ளன. இப்படங்களின் First லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் கார்த்தியின் 30வது திரைப்படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இயக்குனர் தமிழ் இப்படத்தை இயக்கவுள்ளாராம். இவர் இயக்கத்தில் ஏற்கனவே டாணாக்காரன் திரைப்படம் வெளிவந்துள்ளது.

மேலும் இவர் அசுரன், விடுதலை 1, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியுடன் தமிழ் இணையும் திரைப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகுகிறது என கூறப்படுகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.