இந்தியாவின் கேரளாவில் மழை காரணமாக ‘குய்லின் பார் சிண்ட்ரோம்’ என்ற அரிய வகையான நோய் பரவி வருகின்றது .இந்நோய் காரணமாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த மாணவி உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அம்மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘குய்லின் பார் சிண்ட்ரோம்’ எனப்படும் நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.’குய்லின் பார் சிண்ட்ரோம்’ நோய் குறித்து வைத்தியர்கள் கூறுகையில்,இந்நோயானது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி தசை பலவீனத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நோய் அறிகுறி உள்ளவர்கள் நீண்ட கால சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடைய முடியும் எனவும் ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் எனவும் தெரிவிக்கின்றனர் அத்தோடு . இந்நோய் எந்த வயதினரையும் பாதிக்கலாம்.ஆனால் ஒருவரிடமிருந்த ஒருவருக்கு பரவக்கூடிய நோய் அல்ல என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.