கைதானோரை சந்தித்த மனித உரிமைகள் பிரதிநிதிகள்!

0
105

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று சந்தித்துள்ளனர்.
‘அடக்குமுறையை நிறுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் பேரணியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இணைந்து கொண்டன.
இந்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை நடத்தி இருந்தனர்.