கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி, மீண்டும் நாளை ஆரம்பம்!

0
114

முல்லைத்தீவு மாவட்டத்தின், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி, நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, கடந்த மே மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நாளையதினம் மீண்டும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டமைக்கு அமைவாக, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், மீளவும் நாளையதினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.