கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வை

0
183

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று இடம்பெறும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்.