கொக்குவிலில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!

0
220

கொக்குவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
தாவடி, மதுபானச்சாலைக்கு அண்மையில் இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.
மதுபோதையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். பின்னர் கலைந்து சென்ற பின்னர், ஒரு தரப்பின் மீது மறுதரப்பினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோண்டாவிலை சேர்ந்த எம். சிவநிதன் (வயது-34), இணுவிலை சேர்ந்த பவிதரன் (வயது-30) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.