கொசோவோவுடனான உறவுகளை சீர்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை செர்பியா ஆதரித்தால் கலவரம் ஏற்படும் என தேசியவாத எதிர்ப்பாளர்களுடன் இணைந்துள்ள செர்பியாவில் உள்ள ரஷ்ய சார்பு ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2820579701744509&output=html&h=250&slotname=9884828376&adk=3556369904&adf=2589558187&pi=t.ma~as.9884828376&w=300&lmt=1676694016&rafmt=12&format=300×250&url=https%3A%2F%2Fathavannews.com%2F2023%2F1324432&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTEwLjAuMTU4Ny40NiIsW10sZmFsc2UsbnVsbCwiNjQiLFtbIkNocm9taXVtIiwiMTEwLjAuNTQ4MS43NyJdLFsiTm90IEEoQnJhbmQiLCIyNC4wLjAuMCJdLFsiTWljcm9zb2Z0IEVkZ2UiLCIxMTAuMC4xNTg3LjQ2Il1dLGZhbHNlXQ..&dt=1676694016687&bpp=18&bdt=669&idt=239&shv=r20230215&mjsv=m202302130101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dda3541c25c4c1a95-225c4e27c1d00044%3AT%3D1645945307%3ART%3D1645945307%3AS%3DALNI_MZ_cjFB7RKfg19-xocyzMEu4JrB6Q&gpic=UID%3D00000ba537672b69%3AT%3D1673845564%3ART%3D1676693865%3AS%3DALNI_MZiBLhbZc_8XwVEkAA5ORPqnQJErA&prev_fmts=0x0&nras=1&correlator=2106141036150&frm=20&pv=1&ga_vid=885208145.1645945307&ga_sid=1676694017&ga_hid=213767996&ga_fc=1&u_tz=330&u_his=4&u_h=1024&u_w=1280&u_ah=984&u_aw=1280&u_cd=24&u_sd=1&dmc=8&adx=488&ady=1080&biw=1216&bih=913&scr_x=0&scr_y=0&eid=44759837%2C44759875%2C44759926%2C31072385&oid=2&pvsid=4308513565004662&tmod=615102606&wsm=1&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fathavannews.com%2Fcategory%2Fworld&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C984%2C1233%2C913&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=256&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=wrYrbcyZK4&p=https%3A//athavannews.com&dtd=247
சரணடைய வேண்டாம் மற்றும் தேசத்துரோகம் என்று கோஷமிட்ட எதிர்ப்பாளர்களை, ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் எதிர்ப்பாளர்களை செர்பிய எதிர்ப்பு என்று கண்டித்தார்.
இது ரஷ்ய செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான சமீபத்திய அறிகுறியாக பலராலும் கூறப்பட்டாலும், ரஷ்யா எதிர்ப்புக்களைத் தூண்டியதாக நம்பவில்லை என்று அரசாங்கம் கூறியது.
இதனிடையே கொசோவோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் னாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கொலை செய்யப்படுவார் எனவும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
செர்பியாவின் அரசியலமைப்பு ஒழுங்கை வன்முறையாக மாற்ற அழைப்பு விடுத்ததாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், போராட்டத்திற்கு துப்பாக்கி சுடும் துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.
செர்பிய தீவிர வலதுசாரி தலைவர் தம்ஜான் நெசெவிக், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகினற்து. உக்ரைனில் ரஷ்யாவின் போரில் பெரும் பங்கு வகித்த ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவிற்கு அவர் பகிரங்கமாக ஆதரவளித்துள்ளார்.
அவர் சமீபத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வாக்னரின் ரஷ்ய தலைமையகத்திற்கு விஜயம் செய்த படம் வெளியாகியிருந்தது.
கொசோவோவை சுதந்திர நாடாக அங்கீகரிக்க செர்பியா மறுக்கிறது. அல்பேனிய இனத்தை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ, 1998-99இல் நடந்த போருக்குப் பிறகு செர்பியாவிலிருந்து பிரிந்தது.
15 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரத்தை அறிவித்த கொசோவோவில் அமைதி காக்கும் படைகள் நிலைக்கொண்டுள்ள போதும், அவ்வப்போது, இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கின்றது.
ஆனால், இம்மாத இறுதியில், ஜனாதிபதி வுசிக் கொசோவோவின் பிரதமரை பிரஸ்ஸல்ஸில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சந்திப்பார்,
அவர்கள் சமாதானத் திட்டத்தில் கையெழுத்திடுவார்கள் என்று நம்புகிறார், அது செர்பியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் பாதையில் இணைக்கும் அதேவேளை, ரஷ்யாவின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற்றும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான தனது லட்சியத்தை விட ரஷ்யாவுடனான அதன் நீண்டகால நட்புக்கு செர்பியா முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்ற நிலையில், இந்த சம்பவம் அரேங்கேறவுள்ளது.