கொட்டாஞ்சேனை – பரமானந்த மாவத்தை பகுதியில் நேற்று மாலை 6.30 அளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளதுடன் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
உந்துருளியில் சென்ற இருவர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டுத் தப்பி சென்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் தமது முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.