
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றிலிருந்து நேற்று பிற்பகல் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
73 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது திக்ஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.