நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற பேருந்தே இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.