கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.
நாட்டில் கொரனா அச்சுறுத்தல் நிலவிவரும் அசாதார சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு கிலோமீற்றர் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் இந்த கிராமிய வீதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் பெரியகல்லாறு பகுதியில் 10வீதிகள் சுமார் ஏழு கோடி ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளன.
இந்த வீதி புனரமைப்பு பணிகள் பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ப.சந்திரகுமார் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் உறுப்பினர் கு.கணேசநாதன் உட்பட கிராம முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.