புதிய கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆகக் குறைந்த பணப்பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகளில் ஈடுபடுவது முக்கியம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமந்த ஆனந்த, இது தொடர்பில் தெரிவிக்கையில்: புதிய தொழில்நுட்பக் கொடுப்பனவு முறையில் ஈடுபடுதல் அல்லது பணப்பரிமாற்றத்தை மேற்கொண்ட பின்னர் கை கழுவுவதன் மூலம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முக்கிய நடவடிக்கையாகும்.
பணம் மாத்திரமின்றி பொருள்களைப் பரிமாறும் போதும் சுகாதாரப் பாதுகாப்பு முறையைக் கடைப்பிடித்தல் மிக முக்கியமானதாகும்-என்றார்.