கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹபராதுவ பிரதேச சபையை இன்று (திங்கட்கிழமை) தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசசபையின் தவிசாளர் தில்ஷன் விதானகமகே இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த பிரதேசசபையில் கடமையாற்றும் பெண்ணொருவரின் கணவர், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆகவேதான், பிரதேசசபையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அப்பெண் கடமையாற்றும் பிரிவில் கடமையாற்றும் 10பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.