கொரோனா எங்கிருந்து பரவியது? 90 நாட்களுக்குள் கண்டறியுமாறு உளவுத்துறைக்கு ஜோ பைடன் உத்தரவு

0
477

கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் பரவியது என்பதற்கான அறிக்கையை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
தங்கள் முயற்சிகளை இரட்டிப்பு வேகத்தில் செய்து முடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், உளவுத்துறை விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும்படி அமெரிக்காவின் மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் ஆய்வுக் கூடத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்று கூறப்படுவது குறித்தும் விசாரிக்க ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சீனாவுக்கு ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார் .
கொரோனாவின் மூலத்தை கண்டறிய உள்நாட்டில் எழுந்துள்ள நெருக்குதல்கள் மற்றும் சர்வதேச நிர்ப்பந்தங்களால் ஜோ பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது