கொரோனா வைரஸ் தொற்றுடன் அரசாங்கம் அரசியல் செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸை காரணம் காட்டி அரசாங்கம் பாராளுமன்றம் கூடும் நாள்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதாரம், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்தால் அமர்வுகளை தடையின்றி நடத்தலாம் எனத் தெரிவித்தார்.