கொரோனா நோயாளர்களுக்கு கட்டில்கள் உருவாக்கம்

0
220

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சிகிச்சைகளுக்காக அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுகின்ற நிலையில் வைத்தியசாலைகளில் கட்டில்கள் தேவைப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் 10 ஆயிரம் கட்டில்கள் தயாரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனங்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 140 கட்டில்கள் தயாரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.