கொரோனா பரவல் அச்சத்தால், தெற்கு சீனாவில், முடக்க நிலை!

0
161

மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்க நிலையை அந்நாட்டு சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது.

ஏறக்குறைய 19 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்கு பெருநகரமான குவாங்சோ, இன்றைய தினம் (21) அதிக மக்கள் தொகை கொண்ட பையூன் மாவட்டத்திற்கு ஐந்து நாட்கள் முடக்க நிலையை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், டைனிங் சேவைகளை நிறுத்தியது மற்றும் முக்கிய வணிக மாவட்டத்தில் இரவு விடுதிகள் மற்றும் திரையரங்குகளை மூடியுள்ளன.

பெய்ஜிங்கில், அதிகாரிகள் 962 புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்தனர். பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஒன்லைனில் படிக்கத் தொடங்கினர், அதன் கடினமான சில பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

முந்தைய நாள் ஆறு மாதங்களுக்கும் மேலாக முதல் மரணத்தை அறிவித்த பின்னர் தலைநகரில் உள்ள சுகாதார அதிகாரிகள் இரண்டு கொவிட்-19 தொடர்பான இறப்புகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.